வேலைத்திட்டத்துடனேயே பசில் வெளிநாடு சென்றுள்ளார் - திலும் அமுனுகம
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நாட்டுக்கு நல்லது செய்யும் வேலைத்திட்டத்துடனேயே அவசரமாக வெளிநாடு சென்றதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் எதற்காக வெளிநாடு சென்றார் என்பதை தற்போது தெரியப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய அவரால் செய்யக் கூடிய அழுத்தங்கள் ஊடாக நாட்டுக்கு நல்லதைச் செய்யும் வேலைத்திட்டத்துடன் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார்.
அதனை தற்போது கூறினால் செய்ய முடியாமல் போய்விடும். இதனால் அதனை நாங்கள் வெளியிட மாட்டோம் எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.