ரணிலை ஆதரிக்க பசிலிடம் விலைபோன தமிழ் அரசியல் தலைமைகள்!
கடந்த 2022 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு அரகலய எழுச்சியானது முற்றுப்புள்ளி வைத்திருந்ததோடு அந்த சம்பவம் ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக்க வழிவகுத்திருந்தது.
ஆனால் ரணிலின் வெற்றிக்கு தமிழ் அரசியல்வாதிகளை வைத்து பேரம் பேசும் பின்னணி ஒன்று இருந்ததாகவும், அதில் பசில் ராஜபக்சவின் பங்கு உள்ளது எனவும் வடக்கின் முக்கிய அரசியல் கட்சியொன்றின் உறுப்பினரால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வீழ்த்தப்பட்ட கோட்டாபயவின் ஆட்சிப்பீடத்திற்கு பிரதான கட்சிகளில் இருந்து மூவர் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிபீடத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதில் ரணிலை ஆதரிக்கபோவதில்லை என்ற நிலைப்பாட்டுடன் வடக்கு - கிழக்கின் முக்கிய தமிழ் கட்சிகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தி இரு முடிவை வகுத்திருந்தன. எனினும் அந்த நிலைப்பாடும் தோல்வியை கண்டிருந்தது.
இந்நிலையில், அதன்பின்னர் இடம்பெற்ற ஒரு நாடாளுமன்ற உரையில் ரணில் விக்ரசிங்க முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனை நோக்கி “உங்கள் ஆதரவாளர்களில் சிலரும் என்னை வாக்கெடுப்பில் ஆதரித்தார்கள்” என சாடலாக பேசியிருந்தார். இந்த விடயம் அப்போது மறுக்கப்பட்டிருந்தாலும், ஜபிசி தமிழ் ஊடகத்தில் இடம்பெற்ற களம் நிகழ்ச்சியின் ஊடாக தமிழ் அரசியலின் சில சர்ச்சைக்குறிய விடயங்கள் கிளரப்பட்டுள்ளன.
அந்தவகையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரெலோ கட்சியின் உறுப்பினர் விந்தன் கணகரட்னம் “ரணிலுக்கு ஆதரவை திரட்ட அமெரிக்காவில் இருந்து தமிழ் அரசியல்வாதிகளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa)விலைக்கெடுத்து வாங்கினார்” என பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அவ்வாறான குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் உள்ள விடயங்களை மக்கள் மயப்படுத்த அரசியல் சூழ்ற்சி நிலைகளை முழுமையாக அலசி ஆராய்கிறது ஜபிசி தமிழின் களம் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |