பசிலின் நாடாளுமன்ற பிரவேசம்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெளியானது
நாடாளுமன்ற பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள ஜயந்த கெட்டகொட வின் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்சவின் பெயர் பொதுஜன பெரமுனவால் பிரேரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உப்பினரான ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்புரியிலிருந்து ராஜினாமா செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இது குறித்து எழுத்து மூலம் ஜயந்த கெட்டகொட அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடாளுமன்றிற்கு பிரவேசிக்க இடமளிக்கும் வகையில் ஜயந்த கெட்டகொட இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
விரைவில் பெசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.