பசிலுக்கு ஏழு மூளைகள் கிடையாது ஒரு மூளையே உண்டு – ரோஹித அபேகுணவர்தன
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு ஏழு மூளைகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார்.எனினும் அவருக்கு அவ்வாறு ஏழு மூளைகள் இல்லை அவருக்கு ஒரு மூளையே உண்டு என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பசிலின் மூளை, இங்கு இருக்கும் அனைத்து மூளைகளை விடவும் சிறந்த மூளையாகும். அந்த மூளை வெற்றிகரமானதும் தூர நோக்குடையதுமான மூளை.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்னும் கட்சிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி ஐந்தாண்டுகள் பூர்த்தியாகின்றது. இலங்கையின் பெரும் கட்சியாக தற்பொழுது உருவாகியுள்ளது.
இந்த கட்சியை இவ்வாறு உருவாக்கியதன் பெருமை பசில் ராஜபக்சவையே சாரும். 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த தீர்வுகளை அவர் வழங்குவார்.
இந்த வரவு செலவுத் திட்டம் மிகவும் வெற்றிகரமான ஓர் வரவு செலவுத் திட்டம் என்பதனை நான் சபையில் பதிவு செய்கின்றேன் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
