பசிலின் மீள் வருகையால் ஏற்பட்டுள்ள மாற்றம்(Video)
பசில் ராஜபக்சவின் வருகையால் எதிரணிகள் பீதியில் உள்ளன. அதனால்தான் அவருக்கு எதிராக சேறுபூசும் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச செல்லாக் காசாகிவிட்டார், அவரால் முடியாது என சூளுரைத்து வந்த எதிர்க்கட்சிகள், அவரின் வருகையால் கலக்கமடைந்துள்ளன.
மண்ணெண்ணெய் பட்ட பாம்புபோல துடிக்கின்றன. பசிலுக்கு எதற்காக இவ்வளவு பயம்? அவர் செல்லாக் காசெனில் எதற்காக அஞ்ச வேண்டும்? பொய்கள் புயல்போல் வீசும். உண்மைதான் வெல்லும். அதற்கு காலம் செல்லும்.
அந்தவகையில் பசில் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தெரியவரும்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும், மொட்டு கட்சிக்கு பசில் ராஜபக்சவே தலைமைத்துவம் வழங்குவார் எனவும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam