ஒவ்வொரு உயிரிழப்புக்கும் பசிலே பொறுப்பேற்க வேண்டும்! - கம்மன்பில
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மருந்து இறக்குமதி செய்வது சவாலாக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் நிதி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“நாட்டில் அதிகளவில் பணம் அச்சிட்டமை உள்ளிட்ட காரணங்களால் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், டீசல், எரிவாயு, மருந்து பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு 20.6 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவாகும் இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக அதிக கூடிய இறக்குமதி செலவாகும். இதில், 4.6 பில்லியன் டொலர் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக செலவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுமார் 6 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து கோருவது போல் அத்தியாவசியமற்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டால், எரிவாயு மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் வரும் கப்பல்கள் டொலர் இல்லாமல் கடலில் நிற்காது.
மக்களும் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
