வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையின் முக்கிய அமைச்சர்!
அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளது.
வருடாந்த பஞ்சாங்க விநியோக வழக்கு ஒன்றில் இருந்தே அவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
முன்னதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான 2015 ஆம் ஆண்டு பஞ்சாங்க விநியோக வழக்கு தொடர்பில் தமது தீர்மானத்தை சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் பொறித்த சுமார் ஐந்து மில்லியன் பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டன.
இதற்காக திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது





மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
