ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடிப்படை கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்: ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Economic Crisis
By Jenitha May 26, 2022 11:21 AM GMT
Report

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தக் கொள்கைகள் மட்டுமே ஏற்றுமதித் தொழிலுக்கு உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் தலைவர்களை இன்று (26) காலை சந்தித்த போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடிப்படை கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்: ரணில் | Basic Policy Decisions Of The Export Economy

எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் எழுபது நாடுகள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறிய பிரதமர், அந்த நாடுகளில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் அதிகம். சர்வதேச உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது” எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், சரியான கொள்கைகளை வகுப்பதன் ஊடாக அதன் தாக்கத்தை குறைக்க முடியும் என்று பிரதமர் விளக்கியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆலோசணை 

ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடிப்படை கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்: ரணில் | Basic Policy Decisions Of The Export Economy

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் ஒத்திவைப்பு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US