கெஹலியவிற்கு எதிரான அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு மார்ச் 26 ஆம் திகதி வழங்கப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த அறிப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த வெளியிட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடக அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணப் பட்டியல் செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் சுற்றுநிரூபத்திற்கு முரணாக, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,30,984 ரூபா 45 சதம் நிதி, தொலைபேசி கட்டணமாக செலுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri