கனேடிய சுகாதாரத் திணைக்களம் சிறுவர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்
கனடாவின்(Canada) முன்னணி சிறுவர் தானிய உணவு பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பிரதான உற்பத்திகள் இரண்டை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த உணவு வகையில் ஒருவகை பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றை உட்கொள்வதனால் சிறுவர்கள் உபாதைகளை எதிர் நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுகாதாரத் திணைக்களம்
இந்நிலையில் இவ் உணவு வகையில் கொரோனோ பாக்டர் என்ற பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த உணவு பொருள் வகைகள் சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என கனேடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா, நியூ பிரவுன்ஸ்வுக், ஒன்றாரியோ, கியூபிக், சஸ்கட்ச்வான் மற்றும் சில மாகாணங்களில் இந்த உணவுப் பொருள் இணைய வழியில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
227 கிராம் எடையுடைய பக்கெட்களில் இந்த உணவுப் பொருள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இந்த உணவுப் பொருளின் காலாவதி திகதி அடுத்த ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி எனவும் கூறப்படுகிறது.

இந்த உணவு பொருட்களை நுகர வேண்டாம் என கனேடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri