தாமரை கோபுரத்தில் வெளிநாட்டவர் காயம்
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டுப்போட்டியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று ஆரம்பமான (Base Jump) எனப்படும் சாகச நிகழ்வு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று நிகழ்த்தப்பட்ட குறித்த சாகச போட்டியில் அமெரிக்க பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளார்.
உயிராபத்து இல்லை
தாமரைக்கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்த வெளிநாட்டவர் பாராசூட்டில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக அதை திறக்க தாமதமானதால் கூரை மீது விழுந்த நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், வெளிநாட்டவருக்கு உயிராபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam