பாரத் லங்கா திட்டத்தில் கைகலப்பு நடந்ந போது அமைதி காத்த பொலிஸார்: பாதிக்கப்பட்ட பெண் தகவல்
வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் தாக்குதல் நடந்த வேளை பொலிஸ் அதிகாரிகள் அமைதியாக இருந்தனர் என தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தாக்குதலுக்குள்ளானவர்காளால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா நடந்து கொண்டிருந்த வேளையில் எங்களுக்கு வீடு தேவை இருப்பதை கடிதத்தில் எழுதி அங்கே கொண்டு சென்றோம்.
அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்று கொண்டிருந்தமையினால் நாங்கள் அமைதியாக இருந்தோம். அதனையடுத்து, விழா நிறைவடைந்ததும் கதைக்க சென்ற எங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
குறித்த பகுதியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மக்கள் ஆகியோர் தாக்குதல் நடந்த வேலை அமைதியாகவே இருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |