பெருந்தோட்டயாக்க நிர்வாக பிரிவுக்கு, பெருந்தோட்டத்தில் கல்விகற்ற இளைஞர் யுவதிகள்: பாரத் அருள்சாமி

Colombo Sri Lanka
By Thirumal Apr 05, 2024 04:20 PM GMT
Report

பெருந்தோட்டயாக்க நிர்வாக பிரிவுக்கு, தோட்டத்தில் கல்விகற்ற இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுகின்றனர் என மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி (Bharat Arulsamy) தெரிவித்துள்ளார்.

மக்கள் பெருந்தோட்டயாக்கத்தின் 48 ஆம் ஆண்டு விழா கொழும்பில் (Colombo) அமைந்துள்ள தலைமை காரியாலத்தில் இன்று (05.04.2024) நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கச்சதீவை சீன இராணுவம் ஆக்கிரமித்தால் நிலைமை மோசமடையும்! வெளியான எச்சரிக்கை

கச்சதீவை சீன இராணுவம் ஆக்கிரமித்தால் நிலைமை மோசமடையும்! வெளியான எச்சரிக்கை


பெருந்தோட்டயாக்கத்தின் வளர்ச்சி

அவர் மேலும் கூறுகையில், “இந்த 48 வருட பாதையில் பெருந்தோட்டயாக்கத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்க்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறை இன்று 390 பில்லியன் பெருமதியாக காணப்பட்டு வருகிறது. 

Bharat Arulsamy speech at colombo

இவ்வளர்ச்சியில் எமது மக்களின் வியர்வை ரத்தம் மற்றும் தியாகங்கள் பல்வேறு வகையில் உந்து சக்தியாக இருந்தது. 

இருப்பினும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் வசதிகள் சரியான முறையில் கிடைக்கப் பெற்றுள்ளதா இன்னும் அவை கேள்விகுறியாகவே உள்ளது.

1948 நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது எமது மக்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டனர். 1960களில் எங்களுடைய சொந்தங்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்கள். 

Bharat Arulsamy speech at colombo

1980களில் நாட்டில் ஏற்பட்டிருந்த இனக் கலவரங்களினால் மக்களின் வாழ்வாதாரம் மட்டும் அன்றி உயிர்களையும் இழக்க வேண்டியிருந்தது.

1990ஆம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டு யுத்தத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையும் காணப்பட்டது. 

அதேபோல் 2002 ஆம் ஆண்டு வரை நாம் இலங்கை பிரஜை ஆவதே எமது நோக்கமாக இருந்தது. 

தற்போது அபிவிருத்தி காலப்பகுதியில் நாம் உள்ளோம். எமது மக்களுக்கு தேவையான வீடமைப்பு மற்றும் காணி உரிமை தொடர்பான அனைத்து திட்டங்களையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாங்கள் செய்துவருகிறோம்.

Bharat Arulsamy speech at colombo

அந்த வகையில் எமது சமூகம் இலங்கையில் ஒரு தனித்துவ அடையாளத்தோடு பொருளாதார சமூக மற்றும் அந்தஸ்தோடு தலைநிமிர்ந்து வாழவை சொல்லில் மாத்திரமன்றி செயல்படுத்தியும் வருகின்றோம். 

மக்கள் பெருந்தோட்ட யாக்கத்தில் சேவையாற்றிய பல தொழிலாளர்கள் இன்னும் அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்படாமல் அவதியுறுகின்றனர். 

கடந்த காலங்களில் பெருந்தோட்டயாக்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் சரியான முறையில் முகாமைத்துவத்தை மேற்கொள்ளாததன் காரணமாக எமது மக்கள் அதற்கான சுமையை தாங்க வேண்டியதாக உள்ளது. 

Bharat Arulsamy speech at colombo

ஜனாதிபதிக்கு கோரிக்கை

தற்போது இந்த கொடுப்பனவுகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை எமது தொடர் அழுத்தங்கள் காரணமாக சிறிது சிறிதாக வழங்க பட்டாலும் மிகுதி நிலுவை தொகையை துரித கதியில் வழங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் நாம் ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளோம். 

Bharat Arulsamy speech at colombo

எந்த ஒரு தொழில்துறையும் வளர்ச்சி பெற அதன் முக்கிய மூலதனமான மனித வளத்துறை மேம்பட வேண்டும். இன்று நியமனங்களை பெரும் இந்த இளைஞர்களும் யுவதிகளும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். 

அதுமாத்திரமன்றி இவர்களை போல பலர் இந்த பெருந்தோட்ட கைத்தொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் அதனுடனான தொழில்துறை வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்குதாரர்களாக ஆகவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ”என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் நிர்வாகப் பிரிவிற்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். 

Bharat Arulsamy speech at colombo

அதற்கமைய முதல் கட்டமாக ஹந்தான, மவுண்ட்ஜீன், லூல்கந்தூர, ரஹத்துங்கோட, போன்ற தோட்டங்களுக்கு நிர்வாக பிரிவிற்கு இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். 

இதன்போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி, 48 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மக்கள் பெருந்தோட்டயாகத்திற்கும், அதனை சிறப்புற நடாத்தி செல்லும் தலைவர் அபேயசூரிய மற்றும் பொது முகாமையாளர் பிரதீப், அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை மற்றும் நன்றிகளை கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள வைத்தியரான மகளிடம் செல்லும் முருகன் மற்றும் நளினி

பிரித்தானியாவில் உள்ள வைத்தியரான மகளிடம் செல்லும் முருகன் மற்றும் நளினி

ஜப்பானில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா பணமோசடியில் சிக்கிய நபர்

ஜப்பானில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா பணமோசடியில் சிக்கிய நபர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US