அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிட மற்றும் பகிர பேஸ்புக் நிறுவனத்தால் தடை
அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிடுவதையும், பகிர்வதையும் பேஸ்புக் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
செய்திகளை பகிர்வதற்கு சமூக ஊடகங்கள் பணம் செலுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் செய்திகளை பார்வையிடுவதில் பொது மக்களுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகக்கு கூகுள் நிறுவனமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
எனினும் பேஸ்புக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
செய்திகளை பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் செய்திகளை பகிர்வதையும், பார்வையிடுவதையும் இடைநிறுத்தியுள்ளமை தேவையற்ற செயல் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.