மக்களை ஏமாற்றும் வங்கிகள் - நிலையான வைப்புத் வைத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம்
திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி பத்திரங்களுக்கு செலுத்தப்படும் வருடாந்த வட்டி 31 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பொது மற்றும் தனியார் வணிக வங்கிகளின் நிலையான வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு ஒப்பீட்டு வட்டியை செலுத்துவதில்லை என்றும் பல சிரேஷ்ட குடிமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நிலையான வைப்புகளுக்கான வட்டி
பெரும்பாலான வணிக வங்கிகள் இப்போது நிலையான வைப்புத்தொகைக்கு 25 சதவீதத்திற்கும் குறைவான வட்டியை வழங்குகின்றன. ஆனால் அவர்களின் கடன் அல்லது வங்கி அதிக பற்று வசதி வழங்கும் போது 35 சதவீதத்திற்குக்கும் அதிகமான வட்டி வசூலிக்கிறார்கள்.
கடன் அட்டைகளுக்கான வட்டி 36 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை நியாயமற்றது எனவும், நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு நியாயமான வட்டியை அரச வர்த்தக மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள் வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தலையிட வேண்டும் எனவும் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
