பிரித்தானியாவில் இன்று முதல் சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட பணந்தாள்களுக்கு அனுமதி
பிரித்தானியாவில் இன்று முதல் சார்லஸ் மன்னரின் உருவம் பொறித்த பணந்தாள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அவரது தாயார் எலிசபெத் மகாராணியின் முகத்தால் அலங்கரிக்கப்பட்ட முந்தைய பணந்தாள்களின் அச்சிடல்கள் மற்றும் பாவனைகள் காலப்போக்கில் மாற்றம் பெறும் என கூறப்பட்டுள்ளது.
புதிய பணந்தாள்களில் எலிசபெத் மகாராணியின் படத்திற்குப் பதிலாக மன்னரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
உருவப்படம் கொண்ட பணந்தாள்
இராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய பின்னர் மன்னராக சார்லஸ் பதவியேற்றார்.
தொடர்ந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னரின் உருவப்படம் கொண்ட பணந்தாள் இன்று முதல் பிரித்தானியாவில் புழக்கத்திற்கு வந்துள்ளன.
மன்னர் சார்லஸின் படம் புதிய 5, 10, 20 மற்றும் 50 பவுன்ஸ் பணத்தாள்களில் வெளிவந்துள்ளன.
''மன்னர் சார்லஸின் பணத்தாள்களை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு வரலாற்று தருணம்.
இது முதல் முறையாக எங்கள் பணத்தாள்களின் இறையாண்மையை மாற்றியுள்ளோம்'' என இங்கிலாந்து அரச வங்கி கருத்து வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri
