வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் மோசமான செயல் - பல கோடி ரூபா மோசடி
பாணந்துறை - கெசல்வத்தயில் உள்ள அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை அடகு வைத்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் 3 பெண் அதிகாரிகளை குற்றப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு உதவி அதிகாரி மற்றும் இரண்டு இடைநிலை நிர்வாக அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.
குறைந்த மதிப்புள்ள தங்கப் பொருட்களை வங்கியில் அடமானம் வைத்த பின்னர் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் அடமான பத்திரங்களில் போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி மூவரும் 99,370,100 ரூபாவை மோசடி செய்துள்ளனர்.
பெண் அதிகாரிகள்
குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உதவி பணியாளர் அதிகாரியாக பணியாற்றிய 36 வயது பெண், பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
மேலும் 37 வயது இளைய நிர்வாக அதிகாரி ஒருவர் தலதாவத்த வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் கைது
36 வயதான மற்றுமொரு அதிகாரி பாணந்துறை, விஹார வீதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
