நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள்
வவுனியா
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினை சார்ந்த தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரில் இன்று (05.11) மதியம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'அரச வங்கிகளின் கூட்zடு உடன்படிக்கையினை உடனடியாக கைச்சாத்திடுக, அத்தியாவசிய வங்கிக்சேவைக்கு கூட்டு உடன்படிக்கைகள் தேவையில்லையா?' ஆகிய வசனங்களை தாங்கிய தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அரச வங்கிகளில் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலபப்பகுதிக்கான சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இயக்குனர் சபையால் அங்கீகரிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்த நிலையிலும் நிதி அமைசசின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இதனை அங்கீகரிக்கக் கோரி முன்னரும் சில போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.
அதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் மாகாண ரீதியில் நாங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இதற்கும் சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் இந்த போராட்டத்தை அடுத்த வாரத்திற்கு பின் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே இதற்கு எங்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்றிருந்ததுடன், வவுனியா மாவட்டத்தில் இயங்கும் தனியார் மற்றும் அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
திருகோணமலை
அரச வங்கி ஊழியர் சங்கத்தினரால் திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(5) நிகழ்த்தப்பட்டது.
கடற்படைதள வீதியில் பொது வாகன தரிப்பிடத்திற்கு முன்னால் மதிய போசன இடைவேளையின் போது இது நிகழ்த்தப்பட்டது.
இலங்கைவங்கி மக்கள் வங்கி சணச வங்கி தேசிய சேமிப்பு வங்கி கிராம அபிவிருத்தி வங்கி எச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
பல்வேறு வகையான சுலோகங்கள் அடங்கிய அட்டைகளையும் இவர்கள் தாங்கியிருந்தார்கள்.
மட்டக்களப்பு
இலங்கை அரச வங்கிகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 09 அரச வங்கிகளின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்ததில் அரசாங்கத்தினை கைச்சாத்திட வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச வங்கி ஊழியர்களின் கூட்டு ஒப்பந்ததில் உடனடியாக கைச்சாத்திடு என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 11மாதங்களாக குறித்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாத நிலையில் உள்ளதாகவும் உடனடியாக அரசாங்கம் இதில் கைச்சாத்திட்டு தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
