பங்களாதேஷை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பாகிஸ்தான்
புதிய இணைப்பு
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த பங்களாதேஷ் அணி 204 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன.
இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அணி சார்பில் அணியின் மஹ்முதுல்லாஹ் அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றதுடன் ஷகிப் அல் ஹசன் 43 ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணிக்கு 205 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி கொல்கத்தாவில் இன்று (31.10.2023) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
புள்ளிப் பட்டியல்
இந்நிலையில், புள்ளிப் பட்டியலில் பங்களாதேஷ் 9 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 7 ஆவது இடத்திலும் உள்ளன.
இதுவரை பாகிஸ்தான் விளையாடிய 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.
பங்களாதேஷ் விளையாடிய 6 போட்டிகளிலும் 1 வெற்றியை மாத்திரமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.