கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்டுள்ள புதிய சாதனை
இந்தியா மற்றும் பங்களாதேஸஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(10.12.2022) இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 409 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
போட்டி விபரம்
இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு 410 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அணிசார்பில் அதிகபடியாக இஷான் கிஷான் 210 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பங்களாதேஸ் அணியின், ஸகிப் அல் ஹசன் 60 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், எபடோட் ஹொசைன் 80 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனைதொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 34 ஓவர்களின் முடிவில் 182 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், இந்திய அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புதிய சாதனை
இதேவேளை இன்றை போட்டியில் சாதனை ஒன்றும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷான் தனது கன்னி இரட்டைச்சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இஷான் கிஷான் 131 பந்துகளுக்கு முகங்கொடுத்து 24 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 210 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் இரட்டைச்சதம் பெற்ற வீரர் என்ற சாதனையையும் இஷான் கிஷான் தனதாக்கிக்கொண்டார்.
இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வங்கதேசத்திடம் நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.