ரோஹிங்கியாக்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை நாடும் பங்களாதேஷ்
பலவந்தம் காரணமாக இடம்பெயர்ந்த மியன்மார் பிரஜைகளான ரோஹிங்கியாக்களை மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள பூர்வீக நிலங்களுக்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் தன்னார்வத்துடன் திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கோரியுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை தனது உத்தியோகபூர்வ இல்லமான கணபனில் சந்தித்தபோது, பங்களாதேஷ் பிரதமர் இந்த ஆதரவை நாடியதாக பங்களாதேஷ் பிரதமரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான உறவைப் பயன்படுத்தி இந்த உதவி கோரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மியான்மரில் இருந்து பலவந்தம் காரணமாக இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் நீண்டகாலமாக பங்களாதேஷ் தங்கியிருப்பது, முழு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஹசீனா சுட்டிக்காட்டியுள்ளார்.
அலி சப்ரி 2022 நவம்பர் 23-26 வரை இந்தியப் பெருங்கடல் ரிம் எசோசியேஷனின்
22வது அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் சென்றுள்ளார்
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam