பாகிஸ்தானிய மண்ணில் டெஸ்ட் போட்டி தொடரை வென்று பங்களாதேஸ் வரலாற்று சாதனை
சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும் பாகிஸ்தானிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம், பங்களாதேஸ் அணி, முதல் தடவையாக பாகிஸ்தானிய அணிக்கு எதிராக, பாகிஸ்தானிய மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 172 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
10 டெஸ்ட் போட்டிகள்
பங்களாதேஸ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட் இழப்புக்கு 185 ஓட்டங்களையும் பெற்றது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலும் பங்களாதேஸ் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.
இதனடிப்படையில் 2க்கு 0 என்ற அடிப்படையில் தொடரை பங்களாதேஸ் அணி வெற்றி கொண்டுள்ளது.
இதேவேளை இன்றைய தோல்வியுடன், பாகிஸ்தானிய அணி, தமது மண்ணில் இடம்பெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.
ஏனைய நான்கு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
