பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் குழப்பம்!
பங்களாதேஷில்(Bangladesh) மீண்டும் ஒரு குழப்பம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டிருந்தது.
மீண்டும் ஒரு குழப்பம்
அவை எல்லாம் இப்போது தான் சரியாகி வரும் நிலையில், மீண்டும் ஒரு குழப்பம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து பங்களதாதேஷில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைந்தது.
இடைக்கால அரசு அமைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், மீண்டும் குழப்பம் வெடித்துள்ளது.
பேராசிரியர் முகமது யூனுஸ் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலையை எட்ட முடியாததால் ஆட்சி நடத்துவதே கடினமாக இருப்பதாகவும் இதனால் அவர் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பதவி விலகல்
இது தொடர்பாகத் தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில்,
"யூனுஸ் பதவி விலகவுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அது குறித்து ஆலோசிக்க அவரை சந்தித்தோம். அவரிடம் கேட்டால் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறுகிறார். நிலைமை மோசமாக இருப்பதாக அவர் உணர்கிறார்.
நாடு தற்போதிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலையை எட்ட முடியாவிட்டால் பணிபுரிய முடியாது என அவர் நினைக்கிறார். ஆனால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக அவர் தொடர்ந்து நாட்டை வழிநடத்த வேண்டும்.
அரசியல் கட்சிகளிடையே சீக்கிரம் ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறோம். அதேநேரம் தனது பணியைச் செய்ய முடியாவிட்டால் யூனுஸ் ஆட்சியில் இருந்தும் எந்தவொரு பயனும் இருக்காது.
அவர் மீது நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் அரசியல் கட்சிகளால் வைக்க முடியவில்லை என்றால் அவர் ஏன் இந்த பதவியில் இருக்க வேண்டும்" என்றும் கேள்வி எழுப்பினார்.
இராணுவத்தின் ஆட்சி
கடந்த இரண்டு நாட்களாகவே யூனுஸின் இடைக்கால அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இராணுவத்திற்கும் யூனுஸ் ஆட்சிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு மாணவர் போராட்டம் மிகப் பெரியளவில் வெடித்த போது இராணுவத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற இராணுவம் உதவிய போதிலும், மாணவர் போராட்டத்தை எந்த விதத்திலும் தடுக்கவில்லை.
அதன் பிறகும் கூட இராணுவம் ஆட்சியை அமைக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், ராணுவம் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவில்லை.
யூனுஸ் இடைக்கால ஆட்சியை அமைக்க உதவியது. ஆனால், இப்போது இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படி மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டால் அது வங்கதேச எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
