உலகக்கோப்பை தவறிய பங்களாதேஷ்: அரசின் நிலைப்பாடு தொடர்பில் சலாவுதீன் காட்டம்
T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி பங்கேற்காதது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், முன்னாள் இடைக்கால அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருலை "பொய்யர்" என்று பங்களாதேஷ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் முகமது சலாவுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்குச் செல்ல பங்களாதேஷ் மறுத்ததுள்ளது.
இதன்படி, போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
ஆனால், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை நிராகரித்து 24 மணிநேர காலக்கெடு விதித்துள்ளது.

பங்களாதேஷ் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இது அரசாங்கத்தின் முடிவு என்று கூறிய ஆசிப் நஸ்ருல், தனது பதவியை விட்டு விலகுவதற்குச் சற்று முன்பு இது வீரர்கள் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) முடிவு என்று மாற்றிப் பேசியுள்ளார்.
அத்துடன், அவர் இவ்வளவு பகிரங்கமாக பொய் சொல்வார் என நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. அவரும் ஒரு ஆசிரியர், நானும் ஒரு ஆசிரியர் நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான டாக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பொய் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது, வீரர்களின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன் என கூறியுள்ளார்.
மனதளவில் உடைந்த வீரர்கள்
மேலும் இந்த முடிவால் வீரர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சலாவுதீன் கவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு வீரர் உலகக்கோப்பைக்கு செல்லும் போது தனது 27 கால கனவைச் சுமந்து செல்கிறார். அதை ஒரே நொடியில் நீங்கள் அழித்துவிட்டீர்கள் நாட்டின் முடிவிற்காக தியாகம் செய்வது வேறு, ஆனால் தனிப்பட்ட இழப்பு என்பது பெரியது. எனது அணியின் இரு வீரர்கள் ஐந்து நாட்களாக மனரீதியாக கோமா நிலைக்குச் சென்றது போல் இருந்தார்கள்.
அவர்களை மீண்டும் மைதானத்திற்கு அழைத்து வந்தது ஒரு பெரிய சாதனை தான். முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் ஆசிப் நஸ்ருல் பணியாற்றினார். பங்களாதேஷிற்கு பதிலாக உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்து விளையாடியது.
இது தொடர்பான ஊடக அறிக்கைகளின்படி, உலகக்கோப்பையை புறக்கணிக்கும் முடிவில் வீரர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை எனக் கூறப்படுகிறது.
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri