பங்களாதேஷும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்: கடும் தொனியில் சாடிய பங்களாதேஷ் பிரதமர்
இலங்கையை போல பங்களாதேஷும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என விமர்சனம் செய்துள்ளவர்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக சாடியுள்ளார்.
கோவிட் - 19 மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் வீழ்ச்சியின் பின்னர் நிலவும் உலகளாவிய சூழலை உணராமல் அவர்கள் கருத்துகளை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளதாக டெய்லி ஸ்டார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மீன்பிடி வாரம் 2022ன் ஆரம்ப நிகழ்விலேயே பிரதமர் தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் முன்னேறும்
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, "பங்களாதேஷை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணிகளை செய்து வருகின்றோம்.
மக்கள் எப்போதும் எங்களுடன் இருப்பதாலும், மக்கள் மீது எமக்கு நம்பிக்கை இருப்பதாலும் நாடு முன்னேறும்” என குறிப்பிட்டுள்ளார்.