ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதி தொடர்பில் பந்துல வெளியிட்ட முக்கிய தகவல்!
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசினால் 2017 தேசியவரி வருமான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மாற்றமே நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணம் என்றும் இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது இது தொடர்பான திருத்தங்கள் நிதி அமைச்சினால் முன்வைக்கப்படும்.
இந்த உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri