வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பிற்கு விஜயம்!
வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள "ரஜவாச" பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக அமைச்சரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
குறித்த களவிஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வானிப வர்த்தக அமைச்சின் உணவு ஆணையாளர் ஜே.கிறிஸ்ணமூர்த்தி, சதோச நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பீரீஸ், வானிப வர்த்தக அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
களஞ்சியசாலைக்கு சென்ற அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட
மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள “ரஜவாச” பல்பொருள் விற்பனை நிலையம்
தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததுடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள்
தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
குறித்த உணவு களஞ்சியசாலையை முற்றாகக் கண்காணித்த வர்த்தக துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் கட்ட நிர்மாணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் மக்களின் நன்மை கருதி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
பின்பு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
100க்கு15 வீதம் வரி செலுத்திய மக்கள் தற்போது 100க்கு 08 விதமான வரிகளைச் செலுத்துகிறார்கள். ஆகவே இந்த அரசாங்கம் மக்களுக்கு எந்த வித சுமையையும் கொடுக்கவில்லை. உலகிலேயே எரிபொருளின் விலை குறைவானது வரலாற்றில் முதல் தடவையாக 2015ஆம் ஆண்டு தான் குறைந்துள்ளது. எதிர் கட்சியினர் ஆட்சியிலிருந்தனர். அப்போது விலை உயர்வுதான் காணப்பட்டது .
ஆகவே இந்த விலை உயர்வு என்பது உலக நாடுகளின் விலை உயர்வுக்கு ஏற்பவே இலங்கையிலும் அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.