முன்னோக்கிச் செல்லும் இலங்கையை பின்னோக்கி நகர்த்தச் சதி செய்யாதீர்! அமைச்சர் பந்துல வேண்டுகோள்
வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சிறந்த நடவடிக்கைகளால் முன்னோக்கிச் செல்லும் நிலையில் எமது நாட்டை பின்னோக்கி நகர்த்த எவரும் சதி செய்யக்கூடாது என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடன் உதவியின் கீழ் இலங்கைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட 26 புதிய பேருந்துகளை கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டை சிறப்பாக மாற்ற வேண்டும்
நாடு மீதும் மக்கள் மீதும் அக்கறை உள்ளவர்கள் சதி முயற்சிகளுக்குத்
துணைபோகமாட்டார்கள்.
கடந்த வருடத்தை விட இந்த வருட புத்தாண்டு மிகவும் சுபமானதாக
அமைந்திருக்கின்றது.
அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய
பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
