உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது: பந்துல குணவர்தன (Photos)
உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று(09.04.2023) புதிய பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வின் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கம் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
‘‘எந்தவித அரசியல் தலையீடும் இன்றி போக்குவரத்து கூட்டுதாபனத்திற்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமையை மாற்ற என்னால் முடிந்தது.
பிரான்ஸ் நிறுவனத்திடம் உதவி
இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வருமானத்திற்கு அதிகமாகவே செலவு செய்துள்ளனர். ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்றவற்றால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது.
அதே போன்று நாம் எடுத்த வரி சுதந்திரம் உள்ளிட்ட தவறான முடிவுகளும் இதற்கு காரணங்களாகும். முன்னாள் அரசாங்கமும் எடுத்த கடனை அடுத்து வரும் அரசாங்கம் செலுத்த வேண்டும்.
உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது. ஆகவே கடனை மீள செலுத்த பிரான்ஸ் நிறுவனத்திடம் உதவியை கேட்டுள்ளோம்.
2025 ஆண்டாகும் போது போக்குவரத்துசபையின் பணத்தை வெளிச்செல்ல விடாது பாதுகாத்தால் அதனை உங்களுக்கு மீள வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்‘‘ என தெரிவித்துள்ளார்.
புதிய பேருந்துகள் கையளிப்பு
இந்நிகழ்வில் இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பேருந்துகளை தோட்ட மற்றும் கிராமப்புற வீதிகளில் பயணிக்கவும், அதன் மூலம் கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய டிப்போக்களுக்கே இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.பி.ரத்நாயக்க,
எஸ்.பி.திசாநாயக்க, மருதப்பாண்டி ரமேஸ்வரன் மற்றும் டிப்போ அத்தியட்சகர்கள்
டிப்போ ஊழியர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் இந்நிகழ்வில்
கலந்துகொண்டுள்ளனர்.