கைவிடப்பட்டுள்ள எண்ணெய்க் களஞ்சியங்களை பயன்படுத்த ஆலோசனை: பந்துல குணவர்த்தன
பொலன்னறுவை மற்றும் வெலிகந்தை பிரதேசங்களில் கைவிடப்பட்டுள்ள எண்ணெய்க் களஞ்சியங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் தகவல், ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பொலன்னறுவை புகையிரத நிலையம், வெலிகந்தை புகையிரத நிலையப் பகுதிகளில் அமைச்சர் பந்துல குணவர்த்தன கண்காணிப்பு விஜயமொன்றை நேற்றைய தினம் மேற்கொண்டார்.
எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகள்

இதன் போது, அங்கு கைவிடப்பட்டிருந்த இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகள் குறித்து கவனம் செலுத்தியதுடன், அவற்றை மீளச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைக்கு புதர்கள் மற்றும் காட்டுக்குள் கைவிடப்பட்டுள்ள குறித்த தாங்கிகளில் பொலன்னறுவை அருகே மூன்று லட்சம் லிட்டர் எரிபொருள் மற்றும் வெலிகந்தை அருகே இரண்டு லட்சத்து எழுபதாயிரம் லிட்டர் எரிபொருள் சேமித்து வைக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
| இலங்கையில் மாற்றமடையும் அடையாள அட்டை |
| சீன கப்பல் வருவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்:அதிருப்தியை வெளியிட்டுள்ள அமெரிக்கா |
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan