சீன கப்பல் வருவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்:அதிருப்தியை வெளியிட்டுள்ள அமெரிக்கா
சீனாவின் யுவான் வாங் -5 கப்பல் இலங்கைக்குள் வருவதால், இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன என்பதை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இந்தியா இந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் இணக்கம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி
சீன கபபல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இடமளிப்பது தொடர்பில் அண்மையில் கூட தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே சீனாவின் கப்பல் நாட்டிற்கு நுழைய இடமளித்துள்ளமை சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், ஜனாதிபதியிடம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
எனினும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதை எதிர்ப்பதற்கு நிலையான காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என ஜனாதிபதி, அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார்.
ஏற்றுக்கொள்ள கூடிய காரணங்களை முன்வைக்காத இந்தியா மற்றும் அமெரிக்கா
அத்துடன் இந்த செய்தியை கடந்த செவ்வாய் கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சு, இந்திய ராஜதந்திரிகளுக்கு அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களை முன்வைக்காத காரணத்தினால், இலங்கை அரசு, சீன கப்பல், இலங்கைக்குள் வர அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் சீன கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்து நங்கூரமிடப்படவுள்ளது.சீனாவின் இந்த கப்பல் குறைவான வேகத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை யுவான் வாங் -5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதை தவிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தின் நிர்வாகம் மற்றும் கையாளும் நடவடிக்கைகள் அனைத்தையும் சீனாவின் நிறுவனம் ஒன்றே மேற்கொண்டு வருகிறது.
இதனால், சீனாவின் கப்பல் ஒன்று சேவையை ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதற்கு எதிராக செயற்படும் வாய்ப்பு குறைவு என்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
