அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்கும் பந்துல
அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
கொழும்பில்(Colombo) நேற்று(1) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 3ஆம் திகதி நாட்டிலிருந்து வெளியேறவுள்ளதால் இந்த முடிவினை தான் எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலிலிருந்து இடைவேளை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையை மக்கள் வழங்கியுள்ளனர்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வுகள் தங்களிடம் உள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு ஜனநாயக ரீதியில் இடமளிக்க வேண்டும் என்பது எமது பொறுப்பாகும்.
எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடபோவதில்லை. அத்துடன் நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
