பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திரகுமார் கைது
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திர குமார், நிதி மோசடி மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(22.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை மாநகர சபையின் கடைத் தொகுதியில் எட்டு வர்த்தக நிலையங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நகரசபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஐந்து கோடி ரூபா அளவில் மோசடி செய்திருந்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
குறித்த ஊழியர்கள் இருவரும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மாநகர சபையின் வருமான வரி பரிசோதகர்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பண்டாரவளை நகர சபையின் முன்னாள் பிரதி மேயர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில், முன்னாள் பிரதிமேயர் நேற்று முன்தினம்(20.09.2026) கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று(22) காலை பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு (CSIB)வந்தபோது கைது செய்யப்படுள்ளார்.
முன்னாள் மாநகர சபை ஆணையாளர் கஜேந்திரகுமார் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan