பண்டாரநாயக்கவின் ஜனன தின நிகழ்வுகள் இரண்டு இடங்களில்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 124 வது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகித்த மற்றும் அங்கம் வகித்து வதும் அணியினர் தனித்தனியாக இரண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
காலிமுகத்திடலில் நடந்த நிகழ்வு
இதில் ஒரு நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பண்டாரநாயக்கவின் புதல்விகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோரின் பிரசன்னத்துடன் காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு அருகில் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு அருிகல் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர,நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, ஜீ.எல்.பீரிஸ், நவ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம உட்பட மேலும் சில அரசியல்வாதிகள் கலந்துக்கொண்டனர்.
சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் மைத்திரி தலைமையில் நடந்த நிகழ்வு
மற்றுமொரு நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு டாலி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் 9.30 அணிக்கு நடைபெற்றது.
சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளும் மிக எளிமையான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
