கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சிக்கிய மர்ம பொதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் மலசலகூடத்தில் தங்கத் தூள் அடங்கிய பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (11.11.2023) மதியம் 1:35 மணியளவில் சென்னைக்கு புறப்பட இருந்த ஏஐ 272 விமானத்தின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பார்சல் இருப்பதை விமான ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.
பொதியில் தங்க தூள்
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததையடுத்து, விமானப்படையின் அதிகாரப்பூர்வ நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் அந்த பார்சலில் தங்கத்தூள் இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
