சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வாழை பயிர்செய்கை (Photo)
முல்லைத்தீவு - விசுவமடு பகுதியிலுள்ள பெரும்பாலான விவசாயிகளின் வாழை பயிர்ச்செய்கை கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக அழிவடைந்துள்ளன.
இந்த நிலையில் தற்பொழுது வீசிவரும் பலத்த காற்றினால் வாழை பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை
இதன்படி, தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எரிபொருளினை 1200 ரூபாய்க்கு கொள்வனவு செய்து நீர்பாய்ச்சல் மேற்கொண்டு வருகின்றதாகவும் இதனால் தமக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கை
இதனை தொடர்ந்து வருடம் தோறும் இவ்வாறு ஏற்படும் அழிவுகளிற்கான மதிப்பீடுகள் சம்மந்தப்பட்ட திணைக்களங்களால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதற்கான நட்டயீடுகள் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி
விவசாயிகளுக்கு உரிய நட்டயீட்டினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
