பிரித்தானியாவில் இலங்கை தொடர்பில் நாளை முதல் அமுலுக்கு வரும் தடை
பிரித்தானியா நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை ஆபத்தான நாடு என அடையாளப்படுத்தும் சிகப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.
இலங்கையில் கோவிட் 19 தொற்று நோய் பரவலை கவனத்தில் கொண்டு பிரித்தானிய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்கள் பிரித்தானியா செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதுடன் பிரித்தானியா, வட அயர்லாந்து அல்லது ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஏனைய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் மாத்திரம் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் தமது பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனை செய்து தமக்கு கோவிட் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன் பிரித்தானியாவுக்கு செல்லும் முன்னர் 14 நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள ஹொட்டல் ஒன்றையும் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.