சவேந்திர சில்வாவிற்கு தடைவிதிக்குமாறு கடும் அழுத்தம்! அமைதி காக்கும் பிரித்தானியா அரசாங்கம்
யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரித்தானியா அரசாங்கம் தொடர்ந்தும் உரிய பதிலை வழங்கவில்லையென எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளன.
ஏற்கனவே இறுதி யுத்தத்தின் போது 58வது படையணிக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, யுத்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார். அந்த யுத்தக் குற்றச்சாட்டை சவேந்திர சில்வாவும், இலங்கை அரசாங்க தரப்பினரும் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.
எனினும், யுத்தக் குற்றச்சாட்டுக்கு உரிய சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்து, அமெரிக்கா சவேந்திர சில்வாவிற்கு கடந்த பல மாதங்கக்கு முன்னர் தடைவிதித்தது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh பிரித்தானிய அரசாங்கமும் சவேந்திர சில்வாவிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பதிலளித்த, பிரித்தானியாவின் ஆசியவிற்கான அமைச்சர் அமந்தா மில்லின், “நடவடிக்கைகளின் தாக்கத்தை குறைத்துவிடும் என்பதால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தடைகள் குறித்து அரசாங்கம் பொதுவாக முன்கூட்டியே தெரிவிப்பதில்லை என்று” குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சவேந்திர சில்வா தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு, தார்மீக தோல்வியென அந்த நாட்டின் தென் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் விமர்சித்துள்ளார்.
#timetosanction #lka generals says .@Siobhain_Mc in uk parliament - design by @T_E_M_P_L_O pic.twitter.com/GyboJ9koNr
— ITJP (@itjpsl) January 25, 2022