முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிற்கு தடைவிதிப்பு
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பினால் (FFSL ) தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று (28.11.2023) விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் தொடர்பில் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அதுவரை முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் முறைப்பாடு விசாரணை செய்யப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அனைத்து போட்டிகளையும் நிறுத்துமாறு மாவட்ட கால்பந்தாட்ட லீக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் நடத்தை மற்றும் நிர்வாகத்திற்கு எதிராகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் FFSL கடுமையாக மீறுவதாக தோன்று கின்றது என்றும் மாவட்ட லீக்கின் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டுவரையான அறிக்கைகள்,நிதி அறிக்கைகள்,வருகைப்பதிவு மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் உள்ளிட்ட லீக் தொடர்பான அனைத்து ஆவணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டிசம்பர் மாதம் 8 ஆம் தலைமையகத்தில் திகதி விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 32 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
