ஆபத்தான முறையில் உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் - கடும் எச்சரிக்கை விடுத்த பொலிஸார்
சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் முறையான தகுதிச் சான்றிதழ்கள் இன்றி, ஆபத்தான முறையில் உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களை செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்
வீதி பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் நோக்கில், அண்மைக்காலமாக இடம்பெற்ற விபத்துகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலான பேருந்துகள் உரிய அனுமதி இன்றி உருமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும், வீதி தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றிருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகளின்படி, வாகனங்களில் ஆபத்தான அல்லது அனுமதி பெறாத பாகங்களைப் பொருத்துதல், அனுமதியின்றி வர்ண விளக்குகள் அல்லது மின்னும் விளக்குகளை பொருத்துதல்.
தரமற்ற மற்றும் அதிக சத்தமிடும் ஒலிப்பான்களை பயன்படுத்துதல், உற்பத்தியாளரின் அசல் நிறம், வடிவம் அல்லது வாகனத்தின் கட்டமைப்பை சட்ட அனுமதி இன்றி மாற்றுதல். அனுமதியின்றி சித்திரங்கள், விளம்பரங்கள் அல்லது உருவங்களை வாகனத்தில் ஒட்டுதல், அதிக சத்தத்தை உருவாக்கும் வகையில் சைலன்சர்களை மாற்றுதல் அல்லது மேலதிக பாகங்களைப் பொருத்துதல் குற்றமாகும்.
எனவே, அதிகப்படியான கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை வாகனத்தின் இலக்கம், திகதி, நேரம் மற்றும் இடம் ஆகிய விபரங்களை 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு பொதுமக்கள் அனுப்புமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri