யாழ்.பருத்தித்துறையிலுள்ள உணவகங்களில் பொலித்தீன் பயன்பாட்டை நிறுத்த தீர்மானம்!
பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலைமையில் நகர வர்த்தகர்களுடன் இன்று(15) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தடை
அத்தோடு, பொலித்தீனிற்கு பதிலாக வாழையிலையை பயன்படுத்துவதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவகங்களில் உணவுப்பொதி செய்வதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






