யாழில் வியாபார நிலையமொன்றின் செயற்பாடுகளுக்கு அதிரடியாக தடை
யாழ்ப்பாணம் (Jaffna) -நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தும் (TATTO) செயற்பாட்டில் ஈடுபட்டமை மற்றும் அத்துமீறல்கள் இடம்பெற்றமையினால் நபர் ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
சட்ட நடவடிக்கை
எனவே இந்த வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் முன் அனுமதி இன்றி இந்தக் கடையைத் திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.
இந்த அறிவித்தலை மீறினால் 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரிவு 78,149 இற்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத்தருகின்றேன்'' என செயலாளரின் அறி்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam