வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை

Saravanan Sri Lanka Navy Angajan Ramanathan Sri Lanka Fisherman
By Parthiban Feb 29, 2024 08:51 AM GMT
Report

வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என வடபகுதி கடற்றொழிலாளர்கள், கடற்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், உள்ளூர் தமிழ் கடற்றொழிலாளர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை

சரவணபவன் கேள்வி

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை | Ban Northern Fishermen Fishing Activities

கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிக்கின்றார்.

“என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் நீங்கள் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா? உங்கள் அதிகாரத் திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என் நினைக்காதீர்கள்.” என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் எம்.பி கடற்படையை எச்சரித்துள்ளார்.

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட ஊடவியலாளர்கள், பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டுன் அந்தத் தடை நீக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

தொழில் நடவடிக்கைகள்

இந்நிலையில் தற்போது அந்த பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின்புறத்தோடு இணைந்த கடல் பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள விடுதிகளை அமைத்துள்ள கடற்படை, கடலையும் ஆக்கிரமித்து விடுதிகளை அமைக்கப் போகிறதா என முன்னாள் எம்.பி சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை | Ban Northern Fishermen Fishing Activities

“விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்களை தங்க வைக்கின்றனர். இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.”

தேசிய பாதுகாப்புக் கருதி, சட்டத்திற்கு உட்பட சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், எனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான கோரிக்கை

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான கோரிக்கை

கடற்படை பேச்சாளர்  

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மாதகல் சம்பில்துறை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை | Ban Northern Fishermen Fishing Activities

“கடற்படை அவர்கள் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பேச முடியும். மதம் சார்ந்து பேசுவதற்கு எந்த அனுமதியும் இல்லை அவர்கள். கடற்படை அவர்கள், தங்களுடைய தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான அவர்களுடைய கருத்துக்களைச் சொல்லலாமேத் தவிர, அதுவும் சட்ட ரீதியாக, அவர்களுடன் அனுகுகின்ற தரப்பின் ஊடாகத்தான் இதனை தெரிவிக்க முடியுமே தவிர, நேரடியாக அந்த கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தெரிவிக்கமுடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு கடற்பைடை ஒரு போதும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் இறால் பிடியில் ஈடுபட்ட சிலருக்கு முறையான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை எனவும், ஆகவே அவர்களின் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி

தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US