ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை
"குறுகிய கால அரசியல் ஆதாயங்கள் அல்லது உள்நாட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பணிகள் முன்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம்" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
பேரவையின் 55ஆவது அமர்வின் உயர்மட்டப் பிரிவில் முன் பதிவுசெய்யப்பட்ட காணொளி மூலம் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,
நாடு எதிர்நோக்கும் கடுமையான தடைகள் இருந்தபோதிலும், விரிவான ஒழுங்குமுறையில் இலங்கை தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவக்கையில்,
"சபையின் பயனுள்ள பணி முறைகளே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.மேலும், மனித உரிமைகள் பேரவையின் 46-1 மற்றும் 51-1 தீர்மானங்களை இலங்கை நிராகரிக்கும், இந்த தீர்மானங்களினால் நிறுவப்பட்ட வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் நிராகரிக்கும் வெளிவிவகார அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
55ஆவது அமர்வு
பொருளாதார மீட்சி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள உறுதியான முன்னேற்றம் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கிய அவர், குறுகிய கால அரசியல் ஆதாயங்களை விட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறைக் கொள்கை முடிவுகளிலேயே மீட்சியின் அடிக்கல் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வு 2024 பெப்ரவரி 26 முதல் ஏப்ரல் 5 வரை ஜெனீவாவில் நடைபெறுகிறது.
இந்த அமர்வின் போது, மனித உரிமைகள் ஆணையாளர் 2023 மார்ச் 04ஆம் திகதியன்று மனித உரிமை ஆணையத்தின் 51-1 உயர்ஸ்தானிகர் வழங்கும் வாய்மொழிப் புதுப்பிப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் இலங்கையின் அறிக்கையை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக வழங்குவார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |