மூங்கிலாறு சிறுமி உயிரிழப்பு: கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு - மூங்கிலாறு சிறுமி உயிரிழப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த மாதம் 15 ஆம்திகதி மூங்கிலாற்று பகுதியில் காணாமல் போன சிறுமி 18ஆம் திகதி கிராமத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி கொலை தொடர்பில் தாய்,தந்தை,சகோதரி, மைத்துனர், மைத்துனரின் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துக்கொள்ளப்படாத நிலையில் காணொளி உடாக வழங்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி அனைவரையும் எதிர்வரும் 18.01.21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 19.12.21 ஆம் திகதி உயிரிழந்த சிறுமியின் சகோதரியின் கணவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24.12.21 அன்று உயிரிழந்த சிறுமியின் தாய்,தந்தை,சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிராமத்தில் பலரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் மேலும் சிறுமியின் மைத்துனரின் தப்பியாரையும் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களின் வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தொடர்ந்தும்
கிராமத்தில் பலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்து வருவதுடன் விசாரணைகளையும்
முன்னெடுத்து வருகின்றார்கள்.








கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
