கொழும்பில் வீடொன்றில் இன்று வெடித்து சிதறிய சிலிண்டர்
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியொன்றில் இன்று காலை எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு அடுப்புகளைக் கொண்ட எரிவாயு அடுப்பு, எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்ட ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் ஆகியவையே வெடித்துச் சிதறியதாக வீட்டின் உரிமையாளரான பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அடுப்பை விற்பனை செய்த நிறுவனத்திடம், இந்த அடுப்பின் ரெகுலேட்டர் மற்றும் அதன் குழாயை ஆய்வு செய்து அதில் குறைபாடுகள் இல்லை என்று சான்றிதழைப் பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்று காலை அடுப்பை பற்ற வைத்த சந்தர்ப்பத்தில் அது வெடித்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் அடுப்பிற்கு அருகில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன. எனினும் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிலிண்டர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்ததாக அந்த பெண் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
