கொழும்பில் ஆபத்தான கட்டத்திலிருக்கும் மேம்பாலம்: பொதுமக்கள் விசனம் (Video)
கொழும்பு, பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துடன் இணைந்த மேம்பாலம் சேதமடைந்துள்ளமை பாதுகாப்பு கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு நோக்கிய மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் பல வாகனங்கள் பயணிக்கும் மரைன் ட்ரைவ் எனப்படும் கரையோர வீதியில் குறித்த மேம்பாலம் காணப்படும் நிலையில், அதனூடாக பயனிப்போர் ஆபத்தை எதிர்கொள்ளும் அச்ச நிலைமை ஏற்பட்டிருந்தது.
அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தை போன்ற மற்றுமொரு அனர்த்தத்துக்கு இந்த மேம்பாலத்தின் ஏற்படுத்தும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தாமை குறித்து அதிருப்திகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விடயம் சமூக வலையத்தளங்களில் பேசுபொருளான நிலையில், அந்த பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



