அமெரிக்காவை உலுக்கிய இலங்கை நோக்கி வந்த கப்பல் விபத்து: விசாரணைகளை ஆரம்பிக்கும் எப்.பி.ஐ
அமெரிக்காவை(United States) உலுக்கிய பால்டிமோர் பாலம் விபத்து குறித்து அமெரிக்க உளவுத்துறை (FBI) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் ஆறு பேர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் மோதி இலங்கை நோக்கி வந்த சிங்கப்பூர் கப்பலொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
அமெரிக்க உளவுத்துறை
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த கப்பலில் உள்ள எவரும் விசாரணைகள் நிறைவடையும் வரை வெளியேற முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் உளவுத்துறை குறித்த விபத்து தொடர்பான குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இயந்திர கோளாறுகள் இருந்தமை தொடர்பில் கப்பலில் இருந்தவர்கள் அறிந்திருந்தார்களா எனும் கோணத்தில் அந்த பணியகத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |