பெரும் விபத்தை சந்தித்த கப்பல் : இலங்கையர் உட்பட பணியாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதிய சிங்கப்பூர் கப்பலின் பணியாளர்கள் விசாரணை முடியும் வரை கப்பலிலேயே இருப்பார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
20 இந்திய பிரஜைகள் மற்றும் ஒரு இலங்கையர் கப்பலில் இருந்ததை அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
கப்பல் பாலத்தில் மோதியதில் ஒரு பணியாளர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மற்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
துறைமுக சேவைகள் நிறுத்தம்
அறிக்கையின் 2017 புள்ளிவிவரங்களின்படி, அந்த ஆண்டில் சர்வதேச கப்பல் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை 150,000 க்கும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இலங்கைக்கான பயணத்தை மீண்டும் தொடங்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் உணவு, நீர் மற்றும் பிற வசதிகளை கப்பல் பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் இருப்பவர்களுக்கு முக்கியமாக உளவியல் ரீதியான உதவி மற்றும் மனநல ஆதரவு தேவைப்படும் என இந்தியாவைச் சேர்ந்த மூத்த மாலுமியும், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச கடற்படை நலன் மற்றும் உதவி வலையமைப்பின் சர்வதேச செயல்பாட்டு மேலாளருமான சிராக் பாஹ்ரி தெரிவித்துள்ளார்.
பால்டிமோர் துறைமுகம் சேவைகள் நிறுத்தப்பட்டமையால் தினசரி 15 மில்லியன் டொலர் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது.
டாலி என்ற இந்த கப்பல் 27 நாள் பயணமாக இலங்கை செல்லவிருந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |