அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையர் : வெளியாகியுள்ள தகவல்
அமெரிக்க பால்டிமோர் (Baltimore ) பால விபத்தில் சிக்கிய கப்பலில் உள்ள ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் இருப்பதாக பணியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கப்பல் குறித்த இடத்திலேயே உள்ள நிலையில் அதன் 21 பணியாளர்களும் கப்பலிலேயே இருக்கிறார்கள் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவர்களுள் இருபது பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மாற்று வழி
இந்நிலையில், தற்போது கப்பலை பராமரிப்பதிலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை மற்றும் அமெரிக்க கடலோர புலனாய்வாளர்களுடன் ஒத்துழைப்பதிலும் குறித்த இலங்கையர் மும்முரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பால்டிமோர் பாலப் பகுதியில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கான தற்காலிக, மாற்று வழியை அமெரிக்க கடலோர பொலிஸார் திறந்துள்ளனர்.
கடந்த வாரம் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆறு தொழிலாளர்கள் இந்த விபத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
